• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாணியம்பாடியில் தொடர் கொள்ளையன் கைது

Byமதன்

Dec 31, 2021

வேலூர் மாவட்டம் அடுத்த வாணியம்பாடி நியூ டவுன் கோயிலில் கலசங்கள் மற்றும் கோவில் நிர்வாகி வீட்டில் நடராஜர் சிலை ,தங்க நகை பூஜை சாமான்களை திருடி சென்ற தொடர் கொள்ளையன் இளைஞர் நஜீம்(23) கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் ஆகியோர் உத்தரவின் பேரில் நகர உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் துப்பு துலக்கி திருடனை 4 மணி நேரத்தில் சுற்றி வளைத்து போலிசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் அமைந்துள்ள தேசத்து மாரியம்மன் கோயிலில் 5 கலசங்கள், கோவில் நிர்வாகி வீட்டில் ஒரு நடராஜர் சிலை,தங்க நகை மற்றும் பூஜைப் பொருட்களை திருடிச் சென்ற மில்லத் நகர் பகுதியை சேர்ந்த நஹீம் (23) என்பவரை போலீசார் 4 மணி நேரத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவரிடமிருந்து தங்கக் கலசங்கள் ,ஒரு சவரன் தங்க நகை மற்றும் பூஜை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.