கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 35.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல் கழிவுநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பெருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக பொறுப்பாளர்கள் திமுக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் அனைவரும் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.








