• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

செந்தில் பாலாஜியை மட்டும் குற்றம் சொல்ல முடியாது-திருமாவளவன்..,

ByPrabhu Sekar

Oct 1, 2025

பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்..

திருவண்ணாமலையில் காவலர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது குறித்து கேட்டபோது,

பல்வேறு துறைகளிலும் இதுபோன்று நடக்கிறது தமிழக அரசு காவல்துறையினர் மீது உடனடியாக கைது செய்து இருக்கிறது இது போன்ற நடவடிக்கைகள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

அமெரிக்க அரசு திரைப்படங்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது குறித்து கேட்ட பொழுது

நமது பிரதமர் அமெரிக்க அதிபர் டிரம்பு அவர்களுடன் நல்ல உறவை பின்பற்றி வருகிறார் ஆனால் அமெரிக்கா இந்திய மக்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது வரி விதிப்பு மூலமாக

அது குறித்து நமது அரசு மவுனம் கடைப்பிடிக்கிறது என்பதுதான் உண்மை இது குறித்து எதிர்க்கட்சிகள் பேச முயன்றாலும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை மக்களவையில் வருகின்ற கூட்டத்தொடரில் கட்டாயமாக குரல் எழுப்புவோம்

வட மாநில பணியாளர்கள் உயிரிழந்தது குறித்து கேட்ட பொழுது

அரசுஆய்வு செய்ய ஆணையிட வேண்டும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழ்நாட்டுச் சார்ந்தவர்கள் வட மாநில சார்ந்தவர்கள் என பாகுபாடு பார்க்காமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் இனிமேல் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்

இத்தனை மாவட்டங்களில் நடக்காத பிரச்சனை கரூரில் நடந்துள்ளது என விஜய் பேசியது குறித்து கேட்ட போது,

மற்ற மாவட்டங்களில் நடக்கவில்லை என்றால் அந்த மாவட்டங்களும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது அந்த மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளும் பொழுது அதிமுக ஆட்சியில் இருந்ததா? திமுகவில் ஆட்சியில் இருந்ததா? இந்த ஒப்பீடு தவறானது மற்ற இடங்களில் பாதுகாப்பு தந்த அதே காவல்துறை தான் கரூரிலும் இருக்கிறது மற்ற மாவட்டங்களில் பரப்புரை செய்த பொழுது தமிழ்நாடு அரசு என்பது அவருக்கு ஒத்துழைக்கிறது என்றால் இங்கு ஒத்துழைக்க மறுத்தது யார் ? செந்தில் பாலாஜி அவர்களை மட்டுமே குற்றவாளி என சொல்ல விரும்புகிறாரா? விஜய் அப்படி என்றால் அவர் என்ன மாதிரியான குற்றத்தை செய்தார் ஆள்களை ஏவினாரா? கல் எறிந்தாரா? வன்முறையை தூண்டினாரா? அதனால் காவல் துறையினர் லத்தி சார்ஜ் நடந்து துப்பாக்கி சூடு நடத்தி உயிரிழப்பு ஏற்பட்டதா? இதுதான் அரசியல் நேர்மையற்ற கருத்து

கரூரில் நிகழ்ந்தது கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு ஒரு ஸ்கொயர் மீட்டரில் நான்கு பேர் நிற்க வேண்டிய இடத்தில் 10 பேர் நிற்கிறார்கள் 10 மணி நேரமாக காத்திருக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் அங்கிருந்து ஒவ்வொருத்தரும் தப்பிக்க முயற்சி செய்த பொழுது மற்றவர்கள் மீது ஏறி மிதித்து ஓடியதனால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது 100% கண் கண்ட உண்மை அதில் ஒரு உள்நோக்கம் கற்பிப்பதும் திமுக அரசின் மீது பழி போடுவது மிக மிக ஆபத்தான அரசியல் இது விஜய்க்கு நல்லதல்ல

இது அவர் சுயமாக சிந்தித்து கூறியது போல் தெரியவில்லை அவருடன் இருப்பவர்கள் இப்படி பேச வேண்டும் என ஒத்திகை கொடுத்து பேச வைக்கிறார்கள் அவர் எப்போது சுயமாக சிந்திக்கிறாரோ அங்கு தான் நல்ல அரசியல் உருவாகும்.

விஜயுடன் இருப்பவர்கள் சங்பரிவார், பாஜக பாசறையில் வளர்ந்தவர்கள் பாஜகவின் சக்திகள் அவரை சுற்றி இருக்கிறார்கள்..

அவர்கள் கொடுப்பதால் அவர்கள் கூறும் அறிவுரையால் இப்படி பேசுகிறார் இப்படி பேசுவதற்கு என்ன தேவை ஏற்பட்டது யாராவது தூண்டிவிட்டு இதில் நடைபெற்றதா இவர்கள் ஏன் உள்ளே நுழைகிறார்கள் மத்திய அரசு ஏன் உடனடியாக குழு அமைகிறது

அண்ணாமலை விஜய் மேல் தவறு இல்லை எனக் கூறுகிறார் அப்படி பொதுமக்கள் யாராவது கூறினார்களா ? இவர்களே ஒரு கருத்து உருவாக்கத்தை உருவாக்குகிறார்கள் இது விஜய்க்கு எதிராகத்தான் போய் முடியும்..

கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வருவது சர்ச்சையாகி வருகிறது என்பது குறித்து பேசிய அவர்,

ஆம்புலன்ஸ் வருவது என்ன செய்ய முடியும் எங்கள் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் வருகிறது எங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் ஆம்புலன்ஸ் வந்தால் வழி ஒதுக்கி சர்ச்சையாகி வருகிறது.

ஆம்புலன்ஸ் வருவது என்ன செய்ய முடியும் எங்கள் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ்யும் வருகிறது எங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் ஆம்புலன்ஸ் வந்தால் வழியை ஒதுக்கி விடுவார்கள்.

ஆம்புலன்ஸ் வரத்தான் செய்யும் ஆள் இல்லாமல் வந்தால் நோயாளியை அழைத்து வர செல்கிறது என அர்த்தம் இதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது எனகூறி புறப்பட்டுச் சென்றார்.