• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏ.ஐ.தொழில் நுட்பம் தொடர்பான கருத்தரங்கம்..,

BySeenu

Dec 24, 2025

கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் ஏ.ஐ.ஸ்பெக்ட்ரம் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது..
முன்னதாக இதன் துவக்க விழா,கல்லூரியின் முதல்வர் பிரகாசன் தலைமையில் நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினர்களாக பேட்ரிக் ஜே, மெக்கவர்ன் அறக்கட்டளையின் தலைவர் விலாஸ் தர் , பெங்களூரு,இந்திய அறிவியல் தொழில் நுட்ப கல்லூரியின் CSA துறை கௌரவப் பேராசிரியர் பேராசிரியர் யதாதி நரஹரி , ஹைதராபாத் HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின், மென்பொருள் பொறியியல் நிபுணர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்..

தற்போது அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் அவசியம் குறித்து பேசிய சிறப்பு விருந்தினர்கள் கல்வி,தொழில் துறை,மற்றும் சமூக மாற்றத்தில் ஏ.ஐ.தொழில் நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கவுரை நல்கினர்..

கருத்தரங்கின் ஒரு பகுதியாக,கலந்துரையாடல்கள், தொழில்நுட்பக் கண்காட்சிகள் மற்றும் பல்துறை ஒத்துழைப்புகளுடன் ஏஐ ஸ்பெக்ட்ரம் மற்றும் இன்டெலிடெக் எக்ஸ்போவுடன் நடைபெற்றது..

இண்டெலிடெக் கண்காட்சியில் , ஏஐ ஜெனிசிஸ், ஏஐ இம்பாக்ட், ஏஐ ஹொரைசன் மற்றும் ஏஐ டிஸ்ரப்ட் போன்ற பல கருப்பொருள் பிரிவுகள் இடம்பெற்று, புதுமையான செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகள், ஆராய்ச்சிக் முன்மாதிரிகள் மற்றும் தொழில் துறையால் இயக்கப்படும் பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.