
லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா நிறுவனத்தின் தமிழ்நாடு நிர்வாகிகளுக்கான கருத்தரங்கம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய லீகல் ரைட்ஸ் கவுன்சிலிங் பொதுச்செயலாளர் ராஜலட்சுமி அவர்கள் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எங்களது லீகல் ரைட்ஸ் கவுன்சிலிங்கை தற்பொழுது ஐநா சபை மெம்பர்ஷிப் ஆக்கியுள்ளது. இதன்மூலம் எங்களது கவுன்சிலிங் அமைப்பை ஐநா சபை அங்கீகரித்துள்ளது இதன் மூலம் விளையாட்டுத்துறை மற்றும் ஏழைபெண்களுக்கு, விதவைகளுக்கு, அனைத்து விதமான துறைகளிலும் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. வழக்குகளை நடத்த முடியாமல் உள்ளவர்களுக்கு வழக்கை எடுத்து நடத்தி அவர்களுக்கு வேண்டிய நிவாரணங்களையும் வழங்கி வருகிறது என தெரிவித்தார். இச்செய்தியாளர் சந்திப்பில் தலைவர் டி.வி.மதன்குமார்,துனை தலைவர் புகழேந்தி ராஜேந்திரன் உடனிருந்தனர்
