பொன்னியின் செல்வன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் அதிக தொகைகொடுத்து வாங்கியுள்ளது.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல்பாகம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ125 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை அமேசான் வாங்கிய படங்களிலேயே அதிக தொகைகொடுத்து வாங்கப்பட்டது இந்தபடம்தானாம்.