தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் உரிய ஆவணமின்றி வெள்ளிக் கொலுசு, வெள்ளி காப்பு உள்ளிட்ட 18 கிலோ எடையுள்ள வெள்ளி மற்றும் 15 கிராம் தங்க பொருட்களை காவல்துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மதுரை ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரை பிடித்து அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர். அதில் 18 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் கடத்தி வந்ததை தொடர்ந்து வணிக வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரையில் உள்ள பிரபல நகை கடைகளுக்கு விற்பனைக்காக இந்த பொருளை எல்லாம் கொண்டு வந்ததாக மகேந்திரன் கூறிய நிலையில், அவர் கொண்டு வந்த இந்தப் பொருட்களின் மதிப்பு 12 லட்ச ரூபாய். மேலும் இதற்கு 3 சதவீதம் வரி மற்றும் அதற்கு அபராதமும் செலுத்தினால், பறிமுதல் செய்த பொருட்களை கடைக்காரரிடம் வழங்க உள்ளதாக வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.