• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!…

By

Aug 20, 2021

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில் திருமங்கலத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர் சட்டவிரோதமாக தனது கிடங்கில் ரேஷன் கடைக்குச் சொந்தமான அரிசி மற்றும் கோதுமையை பதுக்கி வைத்துள்ளதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆட்சியர் பிருத்திவிராஜ், வட்டாட்சியருடன் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தியதில், மாதவன் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த குடோனில் சுமார் 32 டன் மதிப்பிலான ரேசன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கைபற்றப்பட்ட அரிசி மற்றும் கோதுமையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிற்கு அனுப்பிய வைத்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாரனேரி காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள மாதவனை தேடி வருகின்றனர்.