• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

10 ஆண்டுகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும்: தமிழக அரசு

சீமைக் கருவேல மரங்கள் 10 ஆண்டுகளில் முழுமையாக அகற்றப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், முதல்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்களை அகற்றுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீமை கருவேலம் மரங்களை படிப்படியாக, 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த, கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நிய மரங்களை அகற்றுவதற்காக, 5 கோடியே 35 லட்ச ரூபாயை ஒதுக்கீடு செய்ய, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.