• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ்-க்கு பாதுகாப்பு அதிகரிப்பு… யாரும் கிட்ட நெருங்க முடியாது

Byகாயத்ரி

Jun 23, 2022

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதலாக 4 பிஎஸ்ஓ-க்களை நியமித்துள்ளது அவரது தரப்பு. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு சஃபாரி அணிந்தவாறு ஒரு பெர்சனல் செக்யூரிட்டி ஆபிஸர் மட்டுமே இதுவரை உடன் பயணித்த நிலையில் இப்போது 4 பி.எஸ்.ஓ.க்களை பாதுகாப்பு இறக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் அவ்வளவு எளிதாக அவரை கிட்ட நெருங்க முடியாதபடி 4 பாதுகாவலர்கள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளனர். தினமும் அதிமுக உறுப்பினர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.