• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தென்காசி முதியோர் இல்லம் சீல் வைப்பு

Byவிஷா

Jun 28, 2025

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அசைவ உணவு சாப்பிட்டு 5 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, அந்த முதியோர் இல்லத்தை சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அங்கிருந்த முதியோர்கள் தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், சுந்தர பாண்டியபுரத்தில் முதியோர் இல்லத்தில் மாமிச உணவு அருந்திய 5 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து முதியோர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதன் காரணமாக அங்கு தங்கி இருந்த முதியோர்களை மருத்துவ பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியோர்களை வேறு முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில், தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் பரிந்துரையின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி கிராமம் அன்பு உள்ளங்கள் முதியோர் இல்லத்தில் ஒரு ஆண் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 5 முதியோர்கள் பராமரிப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.