• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

முன் விரோதம் காரணமாக நாட்டாமைக்கு அரிவாள் வெட்டு!!

ByS.Ariyanayagam

Jan 27, 2026

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஊர் நாட்டாமை மற்றும் பேத்திக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஊர் நாட்டாமை சின்னையா(60) இவர் நாளை கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் நேற்று தனது 4 வயது பேத்தி சஷ்விகா உடன் நடந்து சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மைக் செட் கடை நடத்தும் கோபால்(43), முருகன்(35) ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிகுமார் சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோபாலை கைது செய்தனர். மேலும் முருகனை வலை வீசி தேடி வருகின்றனர்.