மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது ஊத்துக்குளி கிராமம் இங்கே 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இங்கிருந்து சோழவந்தான் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்தா பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கு பல்வேறு மாணவ மாணவியர் சென்று படித்து வருகின்றனர்.

அதேபோல கல்லூரி மாணவர்களும் படித்து வருகின்றனர் இந்நிலையில் இந்த ஊருக்கு காலை எட்டு பதினைந்து மணிக்கு வரும் பேருந்து கடந்த ஒரு மாதமாக வரவில்லை இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் சுமார் பத்து கிலோவிற்கும் மேற்பட்ட புத்தகப் பைகளை சுமந்து சுமார் மூன்று முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்குநடந்தே செல்கின்றனர்.
இதனால் அவர்கள் பலவித மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் மேலும் மாணவ மாணவியர் செல்லும் வழியில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பும் இல்லை மாணவ மாணவிகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தினந்தோறும் காலை 8 15 மணிக்கு சரியாகவும் முறையாகவும் பேருந்து வர வேண்டும் என்று கோரிக்கை கொடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாமதமாக ஒன்பது பத்து மணிக்கு வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக வராத பட்சத்தில் சோழவந்தான் முக்கிய சாலையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர். பேருந்து வராத நிலையில் ஒன்றரை மணி நேரமாக பள்ளி மாணவ மாணவியர் காத்திரந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் போக்குவரத்து பணிமனை மேலாளர் தொமுச தலைவர் ஆகியோர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பேருந்தை மீட்டுச் சென்றனர்.
அரசு பேருந்து சிறை பிடித்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பேருந்து சிறைபிடிக்கப்பட்டதால் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அவரது பெற்றோர்கள் டாட்டா ஏசி வாகனம் மூலம் ஆபத்தான முறையில் பள்ளிகளுக்கு அழைத்து சென்ற அவல நிலையும் ஏற்பட்டது.