பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் கல்வி கற்க மட்டும் செல்கிறார்கள் என்று பெற்றோர் மற்றும் பொது மக்கள் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர் பள்ளி மாணவர்கள் தெரு,தெருவாக சென்று குடி தண்ணீர் சுமந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடந்து வருகிறது.

பள்ளி மாணவர்கள்,மற்றும் மாணவியர்கள் எந்த ஒரு பணியிலும் ஈடுபடுத்த கூடாது என்று தமிழக அரசு மற்றும் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது ஆனால் ஒரு சில பள்ளி ஆசிரியர்கள், பாடம் பயில வரும் மாணவ, மாணவியர்களை இது போன்ற பணி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த படுகிறார்கள். இந்த அவலநிலை தொடர்ந்து நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்களின் கோரிக்கை.






