ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் திலகவதி தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஹரிஹரன்(11). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் அத்திகுளம் பகுதியில் நான்கு வழிச்சாலை அருகே உள்ள ஒடைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது ஓடையில் கிடந்த ரசாயன பவுடர் வெடித்ததில் ஹரிஹரன் காயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 60 சதவீதம் தீக்காய பாதிப்பு இருந்ததால், முதலுதவிக்குப்பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை பணிக்காக ஓடையில் இருந்த பழைய பாலத்தை இடிக்க பயன்படுத்திய ரசாயன பொருட்கள் வெடித்து சிறுவன் காயமடைந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.







; ?>)
; ?>)
; ?>)