• Sat. Feb 15th, 2025

மணிப்பூர் ஆளுநராக பதவியேற்றார் இல.கணேசன்!

By

Aug 27, 2021

மணிப்பூர் ஆளுநராக பதவியேற்றார், தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் அவர்கள் தற்போது பதவி ஏற்றுள்ளார்.
தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(வயது 76) தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக இருந்தார்.
இதனையடுத்து,மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரத்தில் அறிவித்தார்.
சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல.கணேசன் நியமனம் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து,,பாஜக தேசிய குழு உறுப்பினர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளை இல.கணேசன் ராஜினாமா செய்தார்.தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.
இந்நிலையில், மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் தற்போது அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றுள்ளார்.