• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி..,

ByT. Balasubramaniyam

Feb 1, 2026

அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமை தங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்ன ப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் போக்கு வரத்து மற்றும் மின் சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமண நிதியுதவி திட்டதின் கீழ் தங்க நாணயம் ஒரு நபருக்கு 8-கிராம் வீதம் பட்டப்படிப்பு படித்த 36 பயனாளிகளுக்கு ரூ.33,98,486.4/- மதிப்பிலான 288-கிராம் தங்க நாணயம் மற்றும் தொகை ரூ.18,00,000/-ம், 10ஆம் வகுப்பு படித்த 17 பயனாளிகளுக்கு ரூ.16,04,840.8/- மதிப்பிலான 136-கிராம் தங்க நாணயம் மற்றும் தொகை ரூ.4,25,000/-ம் ஆக மொத்தம் ரூ.72,28,327.2/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ,சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டம் மூலம் 65 பயனாளிகளுக்கு ரூ 3,26,576.25 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஷ்வரி, அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.