• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கர்நாடக அரசு பள்ளிகளில் காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம்

Byவிஷா

Feb 22, 2024

கர்நாடக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவாக ராகி மால்ட் வழங்கும் திட்டம் தொடங்க இருப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதுசங்கரப்பா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடக அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவாக உப்புமா போன்ற சிற்றுண்டி உணவுகள் மற்றும் வாரத்தில் 2 நாட்கள் பால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரம் ராகி மால்ட் வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இத்திட்டம் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்ததாவது..,
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் ராகி மால்ட் வழங்கும் திட்டம் இன்று (பிப்ரவரி 22) முதல் பயன்பாட்டிற்கு வரும். குறிப்பாக அரசு பள்ளிகளின் தரம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு புதிய விஷயங்களால் மாணவர்கள் ஈர்க்கப்படுவர். ஏற்கனவே சீருடை, காலணி போன்றவை வழங்கி மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.