• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப திட்டம்

ByA.Tamilselvan

Sep 7, 2022

மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு, 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 5,050 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் கிடைக்கின்றன.அத்துடன், 32 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதன் மூலம் 5,375 எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன. மொத்தம் 10 ஆயிரத்து 425 மருத்துவ இடங்கள் உள்ளன.
இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்கிறது.அதன்படி, 757 எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 4,293 இடங்கள் மட்டுமே தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது.நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் இடங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது.
4,293 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு பல ஆயிரக்கணக்கான மாணவ – மாணவிகள் போட்டி போடுகின்றனர். இதில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.கடந்த ஆண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 534 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில், 436 எம்.பி.பி.எஸ். இடங்களும், 98 பி.டி.எஸ். இடங்களும் அடங்கும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.நீட் தேர்வில் எத்தனை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை பொறுத்து போட்டி ஏற்படும். நீட் தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முதலில் நடைபெறும். 2 கட்டமாக அவை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் மாநில அரசு இடங்களை நிரப்ப ரேங்க் பட்டியலை மத்திய அரசு வழங்கும்.அதனை தொடர்ந்து அறிவிக்கை வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.