• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறப்போகும் தமிழ்நாட்டு செங்கோல்..!

Byவிஷா

May 24, 2023

டெல்லியில் கட்டப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது “புது நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபோது நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல். 8-ம் நூற்றாண்டில் சோழ ஆட்சிக் காலத்தில் உருவான செங்கோல் பயன்படுத்தும் மரபு. நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன்பு செங்கோல் நிறுவப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.