• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சசிகுமாரின் ராஜவம்சன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

Sep 10, 2021 , ,

சசிகுமார் நடித்துள்ள ராஜவம்சம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராஜவம்சம். இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் தம்பி ராமயா,மனோபாலா,சதீஸ் , விஜயகுமார், சிங்கம் புலி, மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத் துள்ளார். மேலும் இந்த படத்தை டிடி ராஜா தயாரித்துள்ளார். மார்ச் மாதம் 12 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சசிகுமார் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.