• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குற்றப்பரம்பரையை படமாக்கிறாரா சசிகுமார்?

Byமதி

Nov 30, 2021

வேல ராமமூர்த்தியின் கதையை மையமாகக் கொண்டு சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என அடையாளப்படுத்தப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் அரசாங்கத்தால் கொல்லப்பட்டர்கள். இந்த வரலாறை இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலா ஒரே நேரத்தில் படம் எடுக்க முயன்றார். இதன் காரணமாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே 2016-ல் கருத்து மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவருமே குற்றப்பரம்பரை கதையை கைகழுவினர்.

தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையினர் படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார். வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார். சசிகுமார் இந்தப் படத்தை இயக்க வாய்ப்புள்ளது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவரே பிரதான வேடத்தில் நடிக்கவும் செய்யலாம்.

பாரதிராஜா, பாலா என இரு திரை ஆளுமைகள் ஆசைப்பட்டு நடக்காமல் போன புராஜெக்ட் குற்றப்பரம்பரை. அது சசிகுமாரின் முயற்சியில் படமாகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.