• Sat. Apr 27th, 2024

சசிகலாவிற்கு எதிராக பாயும் வருமான வரித்துறை!

sasikala

குற்றவழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது. அபராதம் விதித்தது ஏன் என்பது குறித்து சென்னை உயர்நீதமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்தது. 1994-95க்கான வருமான வரியாக ரூ.48 லட்சத்தை செலுத்த 2002-ல் சசிகலாவுக்கு உத்தரவிடப்பட்டது என கூறியுள்ளது. வரி செலுத்தும் கோரிய வருமான வரித்துறை உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.

உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. சசிகலா தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புதுறை சோதனையில் சசிகலா 1994-95-ம் நிதியாண்டில் 80ஏக்கர் நிலம் வாங்கிய தகவல் உறுதியானதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தும் உத்தரவை தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *