• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பரிசுப் பொருட்கள் வழங்கிய சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை..,

BySeenu

Apr 17, 2026

கோவை மாவட்டம் மாவுத்தம்பதி அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் 32 மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், மற்றும் பரிசு கேடயங்கள் சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
மேலும் அங்கு பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

திருக்குறள் புத்தகம், ஆங்கில அகராதி மற்றும் வரைதல் புத்தகம் கொடுத்து 50 திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கும், நன்றாக வரையும் குழந்தைகளுக்கும் மற்றும் அகராதியில் குறைந்தது 50 வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தை கூறும் குழந்தைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் “சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை” சார்பாக அறக்கட்டளையின் நிறுவனர் திரு மருதாசலமூர்த்தி பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கார்த்திக், துணைத் தலைவர் சண்முகம், இணை செயலாளர் பிரேமா, துணைச் செயலாளர் முத்துகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் கதிர்செல்வன் மற்றும் ஆசியர்கள் முன்னிலையில் பரிசு பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர் மௌனிகா , கௌரவ ஆலோசகர் கண்ணபிரான், அன்னதான ஒருங்கிணைப்பாளர் சகுந்தலா தர்மலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் சிவகாமி மற்றும் சிஜோ கலந்து கொண்டனர்.