திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை காமதேனு சாரிட்டிஸ் இணைந்து 100 மரக்கன்றுகள் மூலிகைச் செடிகள் நடப்பட்டன. அரசு மருத்துவர் ரெங்கசாமி தலைமை தாங்கினார்.

காமதேனு சாரிட்டிஸ் நிர்வாக அலுவலர் சங்கரகிருஷ்ணன் , திட்ட அறங்காவல சங்கர் முன்னிலை வகித்தார்கள்,சமூக சேவகர் அறக்கட்டளை நிறுவனர் மருதைகலாம் வரவேற்றார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மரக்கன்றுகள் மூலிகை செடிகள் நட்டு தொடங்கி வைத்தார், சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை மைய நிர்வாகி ஜான்சி ராணி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம், அரசு தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன் , தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க இணைசெயலாளர் அரியநாயகம் , சமூக ஆர்வலர் ஆனந்த கிருஷ்ணன் ,பேராசிரியர் முருகானந்தம், அப்துல் கலாம் அறக்கட்டளை திட்ட மேலாளர் அன்பு இன்னாசி ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளைச்சாமி, சதீஷ்குமார், ஜெயபால் ஆகியோர்கள் மரக்கண்றுகள் நடுவது நன்மைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொறியாளர் சாம்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் . அப்துல் கலாம் சேவை மைய அனைத்து கிளை நிர்வாகிகளான சுப்ரமணியன்,APJ முத்துகிருஷ்ணன், சந்தோஷ்குமார்,முத்துகார்த்தி ,பாரதி,திருப்பதி,யானேஸ் ஆகியோர்கள் விழாவை ஏற்பாடு செய்தனர் . இதில் எம்பி சச்சிதானந்தம் பேசியதாவது:
மக்கள் ஒவ்வொருவரும் மரத்தின் அவசியத்தை உணர வேண்டும். அப்போதுதான் நாளைய தலைமுறை மகிழ்ச்சி பெறும். நல்ல காற்றும் சுகாதாரமும் கிடைக்க மரங்கள் அவசியம். இந்த அற்புதமான பணியை செய்யும் மருதைகலாம் தலைமையிலான குழுவினரை நான் பாராட்டுகிறேன்.
இந்தப் பணி அனைத்து இடங்களிலும் தொடர வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகளிலும் மரங்கள் நடப்பட்டால் நாடு நலம் பெறும். இவ்வாறு அவர் பேசினார். நிறைவாக சுகாதார ஆய்வாளர் முனியப்பன் நன்றி கூறினார்.