புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பகவான் அறக்கட்டளை சார்பாக மரக்கன்று வழங்கும் விழாவும் மரக்கன்று நடும் விழாவும் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பென்சில் பேனா வாட்டர் கேன் மரக்கன்று பிஸ்கட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி சாய் சக்தி அகடாமி நிறுவனர் திரு மாகா சுரேஷ் அவர்களும் பேராசிரியர் திருமதி சுசிலா தேவி அவர்களும் திரு சுப்ரமணியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஞா கிரில் சகாய சுந்தரி வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் திருமதி சசிகலா அவர்களும் பெற்றோர் சங்கத் தலைவர் திரு ரவிச்சந்திரன் அவர்களும் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி சத்தியபாமா அவர்களும் நன்றி கூறினார்கள். விழா ஏற்பாடுகளை பகவான் டீ ஸ்டால் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
