• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்.

BySeenu

Mar 7, 2024

கோவை குனியமுத்தூர் பகுதியில் 88″வது வார்டில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் நேற்று வேலையை புறக்கணித்து 88″வது வார்டு அலுவலகம் முன்பு நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று தூய்மை பணியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தூய்மை பணியாளர்களை நேரில் சந்திக்க சென்றபோது மாநகராட்சி ஆணையரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவருடன் வந்த சக உதவி ஆணையர்,துணை ஆணையர் வாகனங்கள் முன்பு படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்குள் தூய்மை பணியாளர்கள் பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காணப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கூறிய நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.