மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையோரம் தூய்மை பணி செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது போலீசாரின் ஸ்கார்பியோ கார் தொழிலாளி மீது நேராக வந்து மோதி கீழே தள்ளி மேலே ஏறி இறங்கியது.
இதில் தொழிலாளி பலத்த காயம் அடைந்தார். மேலும், இது குறித்து போலீசார் கூறுகையில், கார் தானாக ஸ்டார்ட் ஆகி தானாக நகர்ந்து தொழிலாளி மீது இடித்து இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார். மேலும், இந்த விபத்து குறித்து இரண்டு இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.