நடிகை கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடித்துள்ள திரைப்படம் சாணி காயிதம். இதுவரை இயக்குனராக இருந்த செல்வராகவன் முதல் முறையாக நடிகராக திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகிறார். ராக்கி படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்க இப்படம் மார்ச் மாதத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக தங்கை வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார்.
விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ராவான கேங்க்ஸ்டர் திரைப்படம் ராக்கி . இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார் ராக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக சாணி காயிதம் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் செல்வராகவன் முதல் முறையாக நடிகராக அறிமுகமாக உள்ளார்!
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இந்த படத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே தெரிய வந்தது. இந்நிலையில் சாணி காகிதம் மார்ச் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற லேட்டஸ்ட் தகவல் தற்போது கிடைத்துள்ளது.











; ?>)
; ?>)
; ?>)