• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ByKalamegam Viswanathan

Mar 22, 2023

லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு…
மனுதாரர் மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், “நான் சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் . தாசில்தார் பிரவினா மேரி சாலை ஆய்வின் போது ரூபாய் 5000 லஞ்சம் தர மறுத்ததால் 3 யூனிட் எம்.சாண்ட் லாரியில் கடத்தியதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வழக்கில் லாரியை பறிமுதல் செய்தனர் மேலும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.லாரியில் முறையாக அனுமதி பெற்று எம்.சாண்ட் மணலை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. லஞ்சம் வழங்க மறுத்ததால் முறையாக ஆவணங்கள் இல்லை எனக் கூறி புதுக்கோட்டை திருமயம் தாசில்தார் ஆய்வு செய்து மணலையும், லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.இதனால், ஓட்டுநர் மிகவும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.கிழமை நீதிமன்றத்தில் ஓட்டுநருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை திரும்ப பெறும்போது லாரி மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருந்தது லாரியை சரி செய்ய ரூ 1.5 லட்சம் செலவு செய்துள்ளேன்.எனவே, லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் பிரவீணா மேரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, மனுதாரர் மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உத்தரவிட்டார்.