தேனி மாவட்டம் தென்மேற்கு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கீழ் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆணவ படுகொலை சம்பவத்தை மையப்படுத்தி “ஒத்த உசுரு” என்ற தலைப்பில் திரைப்படம் படமாக்கப்படுகிறது

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பூஜை தேனியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்றது
புதுமுக இயக்குனர் ஆதவராஜா இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் விஜய் பிரபு, சந்துரு, ராதிகா, அஞ்சலி ஜூஸ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு பூஜை தொடங்கப்பட்டது.
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி படப்பிடிப்பினை தொடங்கினர்
தேனியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படம் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது என படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.