தேவையான பொருட்கள் :
பெல்லாரி வெங்காயம் – 1ஃ4 கிலோ, உருளைக்கிழங்கு – 3, பட்டாணி – 100 கிராம்
தக்காளி – 4, நல்லெண்ணெய் – 50 கிராம், வத்தல் – 6, சீரகம் – 1 மேஜைக் கரண்டி, மல்லி – 1 மேஜைக் கரண்டி, கடுகு ,மஞ்சள் – 1 மேஜைக் கரண்டி, உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து கொள்ளவும். பிறகு வெங்காயத்தை அரைத்து வைத்து கொள்ளவும். இவற்றுடன் வத்தல் , மல்லி, சீரகம் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் உள்ள பாத்திரத்தை காயவைத்து சூடான பிறகு எண்ணெயை ஊற்ற வேண்டும். ஊற்றிய எண்ணெயின் மீது கடுகு, கருவேப்பிலைப் போட்டு முதலில் கடுகு பொரித்தவுடன் வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாக வதக்கவும். வாசனை வந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு லேசாக வாசனை வரும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய உடனே ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்கும் பொழுது வேக வைத்த பட்டாணி, ஏற்கனவே வேக வைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும், குழம்பு எண்ணெய் தெளியவும் இறக்கினால் சுவையான வெங்காய மசாலா டிஷ் ரெடி..