• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி உப்பளத்தில் உப்பு திருட்டு..,

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (55). இவருக்கு, ஆறுமுகநேரி தனியார் ரசாயன ஆலை பின்புறம் 10 ஏக்கரில் உப்பளம் உள்ளது. கடந்த 12-ம் தேதி இவரது உப்பளத்தில் குவித்து வைத்திருந்த உப்பை சிலர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்தார்களாம். 

இதை அறிந்த மகேஷ் உப்பளத்திற்கு விரைந்து சென்று, உப்பை திருடி கொண்டிருந்தவர்களை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் மகேசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு லாரிகளை ஓட்டிச் சென்று விட்டார்களாம். 900 டன் உப்பை திருடி சென்று விட்டதாகவும், இதன் மதிப்பு ரூ.27 லட்சம் என மகேஷ் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். 

அவரது புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகநேரிபாரதிநகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஆனந்த குமார், அவரது தம்பி நாகராஜன் உள்பட 8 பேரை தேடிவருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின.

இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து முடித்துள்ளனர்.

அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.