• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கஞ்சா விற்பனை: ஏட்டு சஸ்பெண்ட்

ByA.Tamilselvan

Feb 13, 2023

கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலும், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாகவும் இருந்ததாக குமுளி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு நல்லதம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி. குமுளி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வருகிறார். இவர் கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
மேலும் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை நீதிமன்றத்தில் ஒப்படைக்க செல்லும்போது கஞ்சா வியாபாரிகளிடம் விற்பனை செய்தது கூடலுார் இன்ஸ்பெக்டர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் புகாரின் பேரில் கம்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கு குறித்த தகவல் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஐ.ஜி., உத்தரவின் பேரில், தேனி எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்ரே, ஏட்டு நல்லதம்பி மீது துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்தார்.