• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம்… விண்ணப்பிக்க ஆள் இல்லை!!

ByA.Tamilselvan

Feb 23, 2023

ஆண்டுக்கு 6 மாதம் விடுப்பு கொடுத்து, மாதம் 4 லட்சம் ஊதியம் கொடுக்கும் நிறுவனத்தில் பணியாற்றி பலரும் முன்வரவில்லை.
ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் கடற்கரைக்கு அருகே வடக்குக் கடலில் அமைந்துள்ள தொழிற்சாலையில் வேலைக்காக ஆள் தேவை என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டனர். இந்த பெரிய தொழிற்சாலையில் கிணறுகள் தோண்டி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்து எடுத்து சுத்திகரிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை நிலத்துக்கு கொண்டு வந்து சேமிக்க வேண்டும். இந்த வேலைக்காகத் தான் ஆட்களை எடுக்கிறார்கள். இந்த பணிக்காக பணியமர்த்தப்படும் நபர்கள் தினமும் ரூ.36,000 அடிப்படை ஊதியத்துடன் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
இரண்டு ஆண்டுகளில் இரண்டு 6 மாத ஷிப்டுகள் வேலை செய்தால் அவர்களுக்கு ஒரு கோடி வரை சம்பளம் கிடைக்கும். இரண்டு வருடத்தில் ஒரு வருடம் தான் கடலில் வேலை நாட்கள். சம்பளத்தோடு மாதத்திற்கு ஒருமுறை ஒரு வாரம் வரை விடுப்பு எடுக்கொள்ளலாம். ஆனால், இந்த வேலையில் சேர தனி தகுதிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அடிப்படை கடல்சார் பாதுகாப்பு மற்றும் அவசர பயிற்சி, கடல்சார் அவசர பயிற்சி உள்ளிட்ட சில அடிப்படை பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும். அதேபோல மருத்துவப் பயிற்சியுடன் இதர தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் 5 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது. அதற்கு காரணம் கடலுக்குள் வேலை, தனியாக வேலை செய்ய வேண்டும், ரிஸ்க் அதிகம் என்பதால் தான் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.