பிரபல பாலிவுட்டின் முன்னணி நடிகர் சைஃப் அலிகானை அடையாளம் தெரியாத மர்மநபர் கத்தியால் குத்தியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகர் சைஃப் அலிகான். இன்று அதிகாலை 2:30 மணியளவில் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியிலுள்ள அவருடைய இல்லத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகத் தெரிகிறது. அப்போது அடையாளம் தெரியாத கொள்ளையன் தாக்கியதில் சைஃப் அலிகான் படுகாயம் அடைந்தார்.
இதனால் அவர் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர், சைஃப் அலிகானை அதிகாலை 2 மணியளவில் கத்தியால் குத்தினார். அதைத் தொடர்ந்து அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.