• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது..!

தமிழ் எழுத்தாளர் அம்பை (சி.எஸ். லட்சுமி)-க்கு 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயன்படாத பாதைகள் போன்ற பல புத்தகங்களை எழுத்தாளர் அம்பை எழுதியுள்ளார். தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இவர், 1960-ம் ஆண்டில் இருந்து எழுதி வருகிறார். இத்தகைய உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று எழுத்தாளர் அம்பை தெரிவித்துள்ளார்.