• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாதுகாப்பான ரயில் பயணமானது பாதுகாப்பற்றதாக உள்ளது

ByKalamegam Viswanathan

Mar 2, 2025

ரயிலே வடக்கில் உடைக்கிறார்கள். தெற்கே பாதையை மறைக்கிறார்கள்
பாதுகாப்பான பயணம் என அழைக்கப்படும் ரயில் பயணமானது நாளுக்கு நாள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அடாவடித்தனமாக முன்பதிவு செய்யாமல் ஏறி, முன்பதிவு செய்த பயணிகளை மிரட்டி இருக்கையில் அமர வைக்கும் சூழ்நிலை இன்று ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கும்பமேளா விழாவில் நடைபெற்ற ரயில்வே ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி வரை அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை அடித்து நொறுக்கி பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்தனர்.

அதே நிலையே தென் மாவட்டங்களில் இருந்து குறிப்பாக காலை நேரங்களில் சென்னை செல்லக்கூடிய ரயில்கள் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன் பதிவு செய்யப்படாத பயணிகள் ஏறி, அத்துமீறலில் ஈடுபடுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றன. முன்பதிவு செய்யப்பட்டியில் உட்கார்ந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை அமர விடாமல் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், மேலும் பாதையை மறைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் பெண்கள் குழந்தைகள் என பயணம் செய்வதாகவும், இதனால் அவர்களுக்கு உயிர் பலி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது எனவும், முன்பதிவு செய்த பயணிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

இதை தடுக்க வேண்டிய ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே காவல்துறையினர் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதே நேரத்தில் காலை நேரங்களில் சென்னை செல்லக்கூடிய மற்றும் மதிய நேரங்களில் சென்னையிலிருந்து கிளம்பக்கூடிய வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் இதே நிலையை நீடிப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்று பேருந்துகளில் அபராதம் விதிப்பது போல ரயில்களுக்கும், இதே விதியை கொண்டு வர வேண்டும் எனவும், பயணிகளுக்கு இருக்க எவ்வளவு இருக்கிறது. அந்த அளவிற்கு டிக்கெட் விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும், மேலும் பகல் நேரங்களில் தென் மாவட்டங்களில் இருந்து மேலும் ஒரு ரயில் சென்னையிலிருந்து மதுரைக்கு, மதுரையிலிருந்து சென்னைக்கும் இயக்கப்பட வேண்டும் எனவும் அப்பொழுதுதான் பாதுகாப்பான ரயில் பயணம் இருக்கும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா ரயில்வே நிர்வாகம்.