• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு..

Byகாயத்ரி

Sep 6, 2022

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து மார்கழி முதல் தை மாதம் வரை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வர். அத்துடன் முக்கிய விசேஷ நாட்களிலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

அந்த வகையில் திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறக்க உள்ளார். வேறு பூஜைகள் எதுவும் கிடையாது . இரவு 9 மணிக்கு நடை மீண்டும் சாத்தப்படும். ஏழாம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர், வழக்கமான பூஜைகளும் நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. 8ம் தேதி திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும் எல்லா நாட்களிலும் உதயாஸ்தமன பூஜையும், படி பூஜையும் உண்டு என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஏழாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தினமும் மதியம் பக்தர்களுக்கு திருவோண விருந்து வழங்கப்படும் என்றும் செப்டம்பர் 10ம் தேதி இரவு 10 மணிக்கு நடை மீண்டும் சாத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதேபோல் ஸ்பாட் புக்கிங் வசதிக்காக நிலக்கல்லில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.