விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலக மேலாளர் பாண்டியம்மாள் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் கோணம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 57,500 ரூபாய் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து நடத்திய விசாரணையில் சாத்தூரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி
ரூ. 57,500 ஆயிரம் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த தொகையே சாத்தூர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வடிவேலுவிடம் ஒப்படைத்தனர். மேலும் அதிகாரிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பறிமுதல் செய்யப்பட்ட தொகையே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.




