• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பார்க்கிங் கட்டணத்திற்கு ரூ.500: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

By

Sep 15, 2021 ,

தென் தமிழகத்தின் நுழைவாயிலாக உள்ள மதுரையில் தினந்தோரும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் 21 மணி நேரத்திற்கு 500 ரூபாய் வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், முதல் 3 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், அடுத்த 3 மணி நேரத்திற்கு 50 ரூபாயும், அடுத்த 3 மணி நேரத்திற்கு 75 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ,21 மணி நேரம் 39 நிமிடம் காரை நிறுத்தி வைத்திருந்த ஒரு ரயில் பயணிக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, தேவையின்றி வாகனங்கள் நிறுத்துவதால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த இது போன்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.