• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சியிடம் இருந்து ரூ.18,000 கோடி மீட்பு

பல ஆயிரம் கோடி கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து 18,000 ஆயிரம் கோடி மீட்கப்பட்டு வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நீதிபதி ஏ.எம்.கான்வெல்கர் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் திருத்தப்பட்ட விதிகள் மூலம் ஜாமீன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்கி போன்றவர்கள் வாதாடினர்.

சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் முறையிட்டனர். இந்த நிலையில், ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மெஹ்தா ஆஜராகி வாதாடினார். அப்போது விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தொடர்புடைய வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் இதுவரை அவர்களிடம் இருந்து மீட்பட்ட ரூ.18,000 கோடி வங்கிகளில் திரும்ப ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதர நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக குறைந்த அளவில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக துஷார் மெஹ்தா கூறினார்.பிரிட்டன், சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவில் சட்டவிரோத பண பணப்பரிவர்த்தனை வழக்குகள் குறைவு என்று அவர் தெரிவித்தார். முறைகேடாக பெறப்பட்ட 65,000 கோடி ரூபாயை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக துஷார் மெஹ்தா தெரிவித்துள்ளார்.