• Mon. Sep 9th, 2024

வெட்டிக்கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி : முதல்வர்

Byமதி

Nov 22, 2021

புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஆடு திருடியவர்களை துரத்திச் சென்று பிடிக்க முற்பட்ட போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் 2 எஸ்.ஐக்கள் உள்ளடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் மேலும் கூறுகையில், “ரோந்து பணியில் இருக்கும் போது எஸ்.ஐ மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று மிகுந்த துயரம் அடைந்தேன். பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *