மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் திண்ணை பிரச்சாரம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்குதல் மற்றும் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த விலைவாசி தற்போது உயர்ந்துள்ள விலைவாசி குறித்த வேறுபாடுகளை பெண்களிடம் எடுத்துக் கூறி அவர்களின் கருத்துக்களை கேட்டறிதல் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் அரியூர் ராதாகிருஷ்ணன் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மகளிர் அணி செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி சிங்கராஜ் பாண்டியன் விவசாய அணி. மாவட்ட இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்பி குமார் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன்விருகை தருமர் குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன் மகளிர் அணி மகமாயி சாந்தி மாரிமுத்து சந்தனத்துறை தனசேகரன் கச்சை கட்டி ரவி மற்றும் வாடிப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.










