• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர்.

இவரும், அவரது நண்பரான மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்த்த சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா (45) என்பவரும் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்திய யூடியூப் சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக அந்த பெண்ணை தகாத முறையில் விமர்சித்தனர்.

இது தொடர்பாக அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தனர். அதன்பேரில், ரவுடி பேபி மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மதுரை அருகே பதுங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, நண்பர் சிக்கந்தர்ஷாவை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிக்கந்தர்ஷாவை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இதேபோல் ரவுடி பேபி சூர்யாவையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.