• Thu. Oct 10th, 2024

ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதா

ByKalamegam Viswanathan

Jun 9, 2023

ரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி முதல் குலசேகரன்கோட்டை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க நபார்டு வங்கி உதவியுடன் ரூ.ஒரு கோடியே 10 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டது.

அப்போது அங்கு ஆய்வுப்பணிக்காக வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனது காரை நிறுத்தி சாலையை ஆய்வு செய்து அதிகாரிகளை கண்டித்தார்சாலை சரியில்லை எனது வாகனம் வந்தாலே சாலை சேதமாகிவிடும் இது எப்படி நல்லா இருக்கும் dis qualified Road என அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கண்டித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *