• Fri. Jun 28th, 2024

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் சாலையோர மரக்கன்றுகள் நடும் விழா

ByG.Ranjan

Jun 25, 2024

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சி மன்றமும்., கிரீன் பவுன்டேஷன் சார்பில் சாலை ஓர மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம முன்னிலை வகித்தார். காரியாபட்டி யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன் மரக்கன்றுகள் நடும பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கல்குறிச்சி – சமத்துவபுரம் வரை சாலை ஓரங்களில் 100 நாள் திட்ட பணியாளர்களின் ஒத்துழைப்போடு மரங்கள் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மனித பாதுகாப்பு கழகம் மாவட்ட தலைவர் டாக்டர். முனீஸ்வரன் செயலாளர் பிரின்ஸ், கோவிலாங்குளம் பால் சிலம்பம் பயிற்சி பள்ளி நிர்வாகி .வெற்றிவேல், பி. புதுப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள், குருசாமி ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர் சாய்பாபா பாரா மெடிக்கல் நர்சிங் கல்லூரி மாணவிகள், பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்குறிச்சி அமலாலேப் நிறுவனர் .முனீஸ்வரன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *