வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது.

அவர்களை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்களை கைது செய்தனர். இந்த நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் கைதை கண்டித்து நாகூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்டத் தலைவர் அமிர்தராஜா தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், மத்திய மோடி அரசை கண்டித்தும் , ராகுல் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை நாகூர் போலிசார் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் நாகூர் நாகை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.