• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் வேதநாயபுரம் கிராமத்தில் சாலை ,அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, சாலை மறியல் போராட்டம்

ByKalamegam Viswanathan

Feb 19, 2024

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் உள்ளது. இக்கிராமத்தில் 100க்கும் மேற்ட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வழியாக புத்தூர் தளவாய்புரம் மற்றும் இனாம் கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலை அமைந்துள்ளது.

கிராம வழியாக கடந்து செல்லும் இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை அதி வேகமாக செல்வதாகவும், இதன் காரணமாக நேற்று மாலை சாலை ஓரமாக எபினேசர் என்பவர் நின்று கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி தூக்கி எறிந்ததில் எபினேசர் பலத்த காயம் அடைந்து கவலைக்கிடமாக நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் காரணமாக தொடர் விபத்துக்கள் இந்த பகுதியில் ஏற்பட்டு வருவதாகவும் இதனை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரு விளக்குகள் இல்லாதது மேலும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைகிறது எனவும் இப்பகுதியில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வேதநாயகபுரம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய் ஆய்வாளர் முத்துமாணிக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2 நாட்களில் வேகத்தடை அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.