மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலை மறைத்து பயணிகள் நிழற்குடை அமைக்க அரசு முயற்சித்து வருகிறது.

இதனால் கோயில் மறையும் என்பதால்.அந்த கிராமத்தில் உள்ள சரவணன் என்பவர் தட்டி கேட்டு உள்ளார்.இது அடுத்து அவரை காவல் துறை கைது செய்து உள்ளது.இதனால் ஆத்திரமுற்ற அந்த கிராமத்தை சேர்ந்த 200 க்கு மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் நாகப்பட்டினம் சாலையில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது சாலை மறியல் செய்தவர்களுடன் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.




